கால்நடைகள் திடீரென உயிரிழக்கின்றமை காரணமாக மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்லத்த தடை .

 


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் திடீரென உயிரிழக்கின்றமை காரணமாக, பொதுச் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதியால் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.