மட்டக்களப்பில் 3 பொலிஸ் பிரிவில் போதை பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினரால் 8 நாட்களில் 16 பேர் போதைப் பொருளுடன் கைது.




 (கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை பொருளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட போதை பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினரால் மட்டக்களப்பு ,கொக்குவில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 8 நாளில் ஹரோயின், கஞ்சா மற்றும் ஜஸ் போதைப் பொருள்களுடன்  16 பேரை கைது செய்து அந்தந்த பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்துள்ளதாக விசேட பொலிஸ் குழுவினர் தெரிவித்தனர்.

நாட்டில் பொதைபொருள் அதிகதித்ததையடுத்து பொலிஸ் மா அதிபர் உடனடியாக கடந்த 3ம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் வரையில் போதை ஒழிப்பு வாரமாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாவட்டத்திலுள்ள தலா 16 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிசாரை தேர்ந்தெடுத்து 3 விசேட குழுக்களை அமைத்து ஒருகுழுவிற்கு 5 பொலிஸ் பிரிவுகள் என்ற ரீதியில் அந்த பொலிஸ் பரிவுகளில் போதை பொருட்களை வியாபாரம் செய்வேர் மற்றும் பாவனை செய்வோர்களை கண்டிறிந்து கைது செய்யுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதில் ஏறாவூர், கொக்குவில், மட்டக்களப்பு, ஆயித்தியமலை, வவுணதீவு,  பொலிஸ் பிரிவுகளுக்காக அமைக்கப்பட்ட சப் இன்பெக்டர் வை.விஜயராஜ் தலைமையிலாக விசேட குழுவினர் கடந்த 3 ம் திகதி முதல் 10 ம் திகதி வரையிலான 8 நாட்களில் மட்டக்களப்பு ,கொக்குவில், ஏறாவூர் ஆகிய பொலிஸ் பிரிவில் பாடசாலைக்கு அருகில் சைக்கிளில் தேன்குழல் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 16 பேரை கஞ்சா, ஜஸ் போதைப் பொருள், ஹரோயின் போன்ற வற்றுடன் கைது செய்து அவர்களை; அந்தந்த பொலிசாரிடம் ஒப்படைத் துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.