*ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழாவானது 
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி ஒன்று கூடும் மண்டபத்தில் இடம் பெற்றது .
ஆரம்ப
 நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு 
வரவேற்கப்பட்டதை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து 
பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன்   நிகழ்வுகள் வெகுசிறப்பாக ஆரம்பமானது .
ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 5ஆம் ஆண்டு நிறைவுவிழா 
மட்/மட்/ஆனைப்பந்தி
 இந்துக்கல்லூரியின் சுவாமி விவேகானந்தர் பிரதான மண்டபத்தில் 
ஜீவனானந்தம்நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.செ.பேரானந்தம் தலையையில்  
இ.ம.கி.மிஷன் உதவிப்பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தஜீ மஹராஜ் 
அவர்கள் ஆன்மிக ஆசியுரையும் பிரதமவிருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி 
வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.உ.விவேகானந்தம் 
அவர்களும்,கௌரவ விருந்தினராக மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி ஓய்வுபெற்ற 
அதிபரும்(இ.கி.மி.சாரதா பாலர்பாடசாலை ஆலோசகருமான திருமதி.இந்திராணி 
புஸ்பராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களான ஓய்வுபெற்ற ஆசிரியர 
திரு.க.பத்மநாநன் ஐயா அவர்களும் மற்றும் வித்தியாலய பிரதி அதிபர் மற்றும் 
ஜீவனானந்தம் நற்பணிமன்ற அங்கத்தவர்கள் மற்றும் கற்றல் செயற்றிட்டத்தில் 
உள்வாங்கப்பட்ட  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளான.    
மட்/மே/கொடுவாமடு சக்தி வித்தியாலயம் ,
மட்/மே/ஆயித்தியமலை தமிழ் 
வித்தியாலயம் , மட்/மட்/மட்டிக்களி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து 
மொத்தமாக 115 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் ஒருவருடத்திற்கு 
ஒருமாணவனுக்கு ரூபாய் 5000 பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் 
நிகழ்வு இனிதே நடைபெற்றது.மேலும் லண்டனில் வசிக்கும் எமது மன்றத்தின் 
தலைவரின்  மகளான செல்வி.பேரானந்தம் அனண்டி அவர்களின் விநாயகர் ஸ்ருதி என்ற 
  நடனம் எம் நிகழ்வை  மேலும் அழகுபடுத்தியது .அத்துடன் JK Academy 
&நிருத்திய சாகர சிறுவர்களின் நடன நிகழ்வும்  இடம்பெற்றன. 
பெற்றோர்கள்,மற்றும் மன்றத்தின் நன்கொடையாளர்களும் நலன்விரும்பிகளும் 
பெரியோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்















































 



