மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின் 2022ம் ஆண்டிற்கான 15வது அகவைக் கலைவிழா.

 


 

மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின் 2022ம் ஆண்டிற்கான 15வது அகவைக் கலைவிழாவானது பாடசாலையின் அதிபர் சறோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மாருதி மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசைநடனக் கல்லூரி பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் நவேஸ்வரன், ஓய்வு பெற்ற அதிபர் கந்தசாமி, மற்றும் சிறப்பு அதிதியாக மட் கல்குடா வந்தாறுமூலை கணேஸா வித்தியாலய அதிபர்
ஜெயராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் பெற்றோர்கள் பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கௌரவ அதிதிகள் மாணவர்களது பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, தமது உரையில் தெரிவிக்கையில் ‘மாணவர்களது திறன் மற்றும் விருத்தி என்பன சிறப்பான முறையில் இப்பாடசாலையினால் வழங்கப்படுவதாகவும் பாலர்களுக்கு இப்பாடசாலை ஒரு சிறந்த அத்திவாரமாக மிளிர்வதாகவும் கூறி மாணவர்களது திறமைகளைப் பாராட்டினார்.’ மேலும் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த உதவி மாவட்டச் செயலாளா திரு ஆ.நவேஸ்வரன் தமது உரையில் ‘மாருதி பாலர் பாடசாலை இப்பிரதேச பாலர்களுக்கு சிறந்த ஒரு அத்திவாரமாகக் காணப்படுவதோடு ஒரு முன்மாதிரி பாடசாலையாகவும் விளங்குகின்றது’ எனக் குறிப்பிட்டார். மேலும் இப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு தன்னால் இயன்ற அரச உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஜெயராஜா மற்றும் கந்தசாமி ஆகியோர் மாருதி பாலர் பாடசாலையின் சிறப்பான கல்வி நடவடிக்கை மற்றும் அறிவு திறன் விருத்திச் செயற்பாடுகளை வியந்து பாராட்டினர்.நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்சிகளும் இடம்பெற்றது. அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.