அபிவிருத்தி உத்தியோகத்தர்களிலிருந்து ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பரீட்சை முன்னெடுப்புகளினால் பாடசாலைகளில் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டு இரண்டு வருடமாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாக பட்டதாரிகள் ஒன்றியத்தின் கிழக்கு மாகாண கிளைத்தலைவர் க.அனிரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினரும் கருத்து தெரிவித்தார்.