இலங்கையின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பாரிய வெற்றியைப்
பெற்றுத்தந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இன்னும் பல திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
களுவாஞ்சிகுடியில் விவசாய அமைச்சின் உதவி திட்டத்தின் கீழ்
முன்னெடுக்கப்படும் மாதுளம்பழ செய்கையினை அமைச்சர் பார்வையிட்டார்.
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் வகையில் இந்த மாதுளம்பழ செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை
தொடர்ந்து நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட
பயனாளிகளுக்கான உழயவு இயந்திரங்கள் அமைச்சரினால் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி,செங்கலடி,வெல்லாவெளி,
களுதாவளை,அம்பாறை மாவட்டத்தின் கோமாரி ஆகிய பகுதிகளில் நவீன விவசாய
மயமாக்கல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மாதுளம்பழ செய்கை,வாழைப்பழ
செய்கை,கொச்சிக்காய் செய்கையாளர்களுக்கு இந்த இயந்திரங்கள்
வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா
ஜகம்பத்,மட்டக்களப்பு மாவட் அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,களுவாஞ்சிகுடி
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பலர் கலந்துகnhண்டனர்.
இதன்போது 05விவசாயிகளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன் கடந்தகால வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டு கொடுப்பனவும் வழங்கப்பட்டது.