அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி ஜங் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாட லும்.







 

 மேற்படி நிகழ்வு  East Lagoon Hotel லில் இடம்பெற்றது.  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய 05 பிரதான கட்சிகளான NFGG, SLFP, UNP, TNA, TMVP ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் 05
பேர் இச்சந்தப்பில கலந்து கொண்டனர். இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( NFGG)கட்சி சார்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் கட்சியின் தலைமைத்துவ சபை மற்றும் மகளிர் பிரிவின் முக்கிய உறுப்பினருமான திருமதி ஜெம்ஹூத் நிசா மசூத் கலந்து கொண்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 25% கோட்டா முறைமையின் ஊடாக அரசியலில் பெண்கள் உள்வாங்கப்பட்ட பின் எதிர் நோக்குகின்ற சவால்கள் , பிரச்சினைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நகர சபை, பிரதேச சபை, மாநகர சபைகளில் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் போது அது ஆளும் கட்சி, எதிர்க்
கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சரிசமமாக வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆதரவைப் பெற்று வந்த பெண் உறுப்பினர்களான எங்களால் பெண்களின் பிரச்சிணைகளை தீர்த்து வைக்க முடியும். இனறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பஙகள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமையின் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிறுவர்களும் உரிய வயதில் திருமணம் முடிக்காமல் இளம் பெண்களும் மிகவும் கஷ்ட்டப் படுகிறார்கள்.
இவர்களுக்கான கல்வி வழிகாட்டல்கள், வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள்,அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் இன்னும் பல உதவிகளை பெண் உறுப்பினர்களான எங்களால் வழஙக முடியும். இதற்காக கட்சி பேதமின்றி பெண்களாகிய எங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க தூதுவரிடம் பெண் உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
மேலும் அண்மைக்காலமாக பெண்களின் அரசியல் உறுப்புரிமையை 25%ஐ விட குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எங்களால் அறிய முடிகிறது. எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்தும் நோக்கில் தற்போதுள்ள 25% கோட்டா முறைமை அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர அது குறைக்கப்படக் கூடாது என இக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ஏனைய கட்சிகளின் பெண் உறுப்பினர்கள் சார்பாக தங்களிடம் கேட்டுக் கொள்வதாக NFGG கட்சியின் நகர சபை உறுப்பினர் திருமதி ஜெம்ஹூத் நிசா அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தார்.  இவ் விடயம் தொடர்பாக கடந்த மாதம் இந் நாட்டின் பிரதமருடான சந்திப்பின் போதும் தான் இக் கருத்தை பிரதமரிடம்  தெரிவித்ததாக கூறினார். இந் நாட்டின் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் தான் அடிக்கடி பேசுவதாகவும் உங்களுடைய இந்த கருத்தை நான் அவர்களிடம் தெரிவிப்பேன் எனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜங் தெரிவித்தார்.
மிகவும் பெறுமதியான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவும் கலந்துரையாடல்களாகவும் இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.