120 ஆடுகள் மற்றும் மூன்று லொறிகளுடன் ஐந்து பேர் கைது .

 


திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி  120 ஆடுகளைக் கொண்டு சென்ற ஐந்து பேர், நேற்று (20) அதிகாலை  கைது செய்யப்பட்டாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குருணாகல், கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்களே 120 ஆடுகள் மற்றும் மூன்று லொறிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள், கிண்ணியா, வான்எல, தோப்பூர், கந்தளாய் போன்ற பகுதிகலிருந்து 120 ஆடுகளுடன் மூன்று லொறிகளில் பயணித்தபோது, அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டனர்.