
ஷிவா முருகன்
தொழில்சார் உளவள நிலையத்தின் அனுசணையுடன் (PPCC), BMZ மற்றும் Christian Blind Mission ஆகிய பங்காள நிறுவனத்தின் நிதி அனுசரைணயுடன் மட்டக்களப்பு பிரதேத்தில் இயங்குகின்ற வீச்சுக்கல்முனை, புதூர், சின்ன ஊறணி, திராய்மடு, சத்துருக்கொண்டான், மாமாங்கம், புன்னச்சோலை, கொக்குவில், பனிச்சையடி மற்றும் கறுவப்பங்கேணி ஆகிய இடங்களில் இயங்குகின்ற சிறுவர் கழகங்களின் பங்குபற்றலுடன் இன்றைய (2022.10.15) சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 300க்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக இன்றைய நிகழ்வுகள் வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்காவில் நடைபெற்றது.
மிக முக்கியமாக சிறுவர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தின் முழுமையான சுக வாழ்வுக்கான சூழலை ஏற்படுத்தும் இந்த திட்டத்தில் சிறுவர் கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இவர்களின் ஆளுமைகள், திறமைகள், தலைமைத்துவப் பண்புகள் இவற்றினை மேம்படுத்துவதற்காக சிறுவர் கழகங்கள் மேற்கூறிப்பிட்ட கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்டு அவர்களின் முழு பங்குபற்றலுடன் இயங்குகின்றன.
இவற்றிற்கு குறிப்பிட்ட கிராமங்களின் சமூகமட்ட அமைப்புக்களும் ஒத்துழைப்புக்களை நல்கின்றது. மேலுமாக இவை அனைத்திற்கும் தொழில்சார் உளவள நிலையம் முழு ஆதரவையும். அனுசரணையையும் வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அத்தோடு உலக உள நல தினத்தினை (ஓக்டொபெர் 10) கொண்டாடும் முகமாகவும் உளவளம் சார்ந்த விழிப்புணர்வுகள் சமூகமளித்த சிறுவர் மற்றும் சிறுமிகளிடையே பகிரப்பட்டது.
சிறுவர்கள் இன்றைய நாளில் தங்களை முற்றும் மறந்து சித்திரம், ஆடல், பாடல் மற்றும் இதர வேலைகளில் தங்களை முழு முச்சுடன் ஈடுபடுத்தினர். அத்துடன் சிறுவர் கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு தொழில்சார் உளவள நிலையத்தின் அனுசரைணயுடன் வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட சிறுவர்கள் “மீளேழுவோம்” என்ற தலைப்பினில் வீதி நாடகமாக அங்கு பிரசன்னமாக இருந்த சிறுவர்கள் மத்தியில் காட்டப்பட்டது.
தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறுவர்களின் தேவைகள் அவர்கள் எதிர் நோக்குகின்ற சவால்களை விழிப்புணர்வு செய்தியாக பகிர்ந்தனர்.




































