தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை வரவேற்கின்றோம் - எம்.ஏ.சுமந்திரன்

 


புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை  வரவேற்கின்ற அதே நேரத்தில், இந்த விடயத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.