மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு கிருஷ்ண சுவாமி ஆலய சங்காபிஷேகம் இன்று (26) பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் இசைக்க, மேளவாத்தியங்கள் முழங்க, அடியவர்களின் அரோகரா கோசத்துடன் வெகுசிறப்பாக நடந்தேறியது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நேற்று சங்காபிஷேகம் இடம்பெற்றது.
சங்காபிஷேகத்தை முன்னிட்டு, கல்லடி மாரியம்மன் ஆலயத்திலிருந்து பெருமளவான பெண் அடியவர்கள் பாற்குடம் ஏந்தி வர, கல்லடி புதிய கல்முனை வீதி வழியாக மேற்படி ஆலயத்தை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாமா- ருக்மணி சமேத கிருஷ்ண பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சங்காபிஷேகக் கிரியைகளை நயினை பிரதிஷ்டா பூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள் மற்றும் இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் வேதாகம ஞான பாஸ்கரன் சிவசிறி தானு மகாதேவ குருக்களாலும், உரிய விதிப்படி மேற்கொள்ளப்பட்டன.







.jpg)




