மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் மகளீர் குழுத் தெரிவு

 

 




ருத்ரா -விசேட நிருபர்
 
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் மகளீர் குழுத் தெரிவுக்கான கூட்டமானது நேற்று சனிக்கிழமை ஒன்றுகூடப்பட்டது.
மட்/ மாவட்டத்திற்கு உட்பட்ட கூட்டுறவுச்சங்களில் உள்ள மகளீர் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றதுடன் இந் நிகழ்வு மட்/ மாவட்ட கூட்டுறவுச் சபையின் காரியாலயத்தில் நடைபெற்றது.

கூட்டுறவு திணைக்கள உத்தியோகஸ்தர்,  மட்டக்களப்பு கூட்டுறவுச்சபைச் செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் ஜனநாயக ரீதியான முறையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.