இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி உரம் கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட உள்ளன .

 


பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான மதிப்பிடப்பட்டுள்ள உரத்தொகையில் முதலாவது தொகுதியாக 13,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த உரக்கப்பலானது சீனாவிலிருந்து இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பெரும்போகத்துக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியானது 105 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.

முதல் தொகுதி யூரியாவில் 7500 மெட்ரிக்தொன் உரத்தை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரும்போக செய்கை இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், விதை நெல் விதைத்த 14 நாட்களுக்குள் முதல் உரம் இடுவதற்கு தேவையான போதுமான இருப்புகளை அனைத்து விவசாய சேவை மையங்களுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.