மட்டக்களப்பு பாலமீன் மடு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்குதலினால் காணாமல் போனதாக தேட்ட நபர் சடலமாக நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பாலமீன் மடு முகத்துவாரம் கடல் பகுதியில் நேற்று மாலை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் நான்கு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒருவர் காணாமல் போனநிலையில் மூவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு பாலமீன் மடு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பிய நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்ட மீனவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
காணாமல் போனதாக தேடப்பட்ட நபர் திராய் மடு முதலாம் குறுக்கு வீதி பகுதியை சேர்ந்த 54 வயதுடைய உம்முனி விஜயகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என உறவினர்கள் தெரிவித்திருந்த நிலையில் கடற்படையினரால் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட தேடுதலின் போது பாலமீன் மடு முகத்துவாரம் கடல் பகுதியில் மணலில் புதையுண்ட நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் மரணம் தொடர்பான மரண விசாரணைகள் ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் முன்னிலையில் இடம்பெற்று மேலதிக பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்





