திருடப்பட்ட உந்துருளியை பயன் படுத்தி பெண்ணின் தங்க சங்கிலி அபகரிப்பு .

 


வல்வெட்டித்துறையில் திருடிய உந்துருளியை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்க சங்கிலி வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் உந்துருளி  திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.