இன்று முதல் இலங்கைக்கான .ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோ சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது

 


ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இன்று முதல் இலங்கைக்கான சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏரோஃப்ளோட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.