காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும்
முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து
வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர்
தெரிவித்துள்ளனர்.
இவர் காணாமல் போனதையடுத்து, உறவினர்களில் ஒருவர்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு (24) முறைப்பாடு ஒன்றை பதிவு
செய்துள்ளார்.
தற்போது, காத்தான்குடி பொலிஸார் குடும்பத்தினருடன்
இணைந்து இவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இன்று (25) மதியம்
வரை அவரை பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
யாராவது
இவரைக் கண்டால், காத்தான்குடி பொலிஸாருக்கு அல்லது கீழ்க்காணும் தொலைபேசி
எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
📞 077 4710340
📞 077 3372828





