. வாகரை காயாங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இளம்புயல் சிறுவர் கழகத்தின் சிறுவர் தின விழா இடம்பெற்றது
சிறுவர் கழக தலைவர் சேகர் தனுஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாகரை பிரதேச செயலாளர் எந்திரி.க.அருணன் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் கு.பிரணவன், கணக்காளர் ச.ஜெயேந்ரா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ், முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்..கஜேந்தினி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் , வேல்ட்விஷன் அதிகாரிகள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் , சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என்பன இடம்பெற்றதுடன், அனைத்து சிறார்களுக்கும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.