கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 


போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும், கிழக்கில்  பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகளால், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, போதைப்பொருள் இல்லாதொழிப்புக்கான கோஷங்களை எழுப்பியும், வாசகங்களை எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

அண்மைய காலமாக மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.