இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறலை செய்து நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மனித உரிமைகள்,
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில்
பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு
பிரத்தியேக செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.





