ருத்ரா
கிழக்கு மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் 123 புள்ளிகளைப் பெற்று மட்/களுதாவளை மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் கடந்த 05 திகதி தொடக்கம் 09 திகதி வரை நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் மட்/களுதாவளை மகா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு வெற்றிக் கிண்ணத்தினையும் தனதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.