காத்தான்குடியில் காணாமல் போன நபரின் உடற்பாகம் வாவியில் இருந்து மீட்பு – முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்!





காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக முதலை தாக்குதல் எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

தகவலின்படி, காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் என்ற நபர் நேற்று முன்தினம் (24) வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்தார். அவரை உறவினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிவந்த நிலையில், இன்று மாலை அவரது தலைப்பாகம் காத்தான்குடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 (ஏ.எல்.எம். சபீக்)