கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் நகரில் டெனிசன் வீதிக்கு தெற்கே மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதியின் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதன் கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 52 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் 21 வயது மகனும், 23 வயது மகளும் இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.