நாமல் ராஜபக்சவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது .

 


குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (07) நியமிக்கப்பட்டார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் நாமல் ராஜபக்சவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்தார், அதை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தினார்.