" வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம்" எனும் கருப்பொருளில் தன்னாமுனை மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தினால் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் 2022 ஆண்டில் சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் “தாலாட்டு“ சிறுவர் தின விசேட நிகழ்வு உதவும் கரங்கள் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமையில் உதவும் கரங்கள் அமைப்பின் இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வில் சிறுவர்களின் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான சிறுவர் தின பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம், சிறப்பு அதிதியாகவும், மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம், உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் எ.முகுந்தன் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
கனடிய சி.ஆர்.இ.பி அமைப்பின் நிதி உதவியில் கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பினால் " வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக பிளிர்வோம் " எனும் கருப்பொருளில் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் கீழ் கிழக்குமாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், மாணவர்களின் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்யும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.