தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கலைவாணி வாசகர் வட்டம் நடத்திய பரிசளிப்பு விழா.






ருத்ரா


கலைவாணி வாசகர் வட்டம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு
 குருக்கள்மடம் பொது நூலகத்தில் கடந்த புதன்கிழமை அன்று பரிசளிப்பு விழா ஒன்றை நடார்த்தியது.
 இதன் போது கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு  மேல் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசீல்கள் வழங்கப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந் நிகழ்விற்கு மண்முனை  தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்  திரு ஞா.யோகநாதன், திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்  திரு  க . ஞானரெத்தினம் , மண்முனை  தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திரு சா.அறிவழகன், சன சமூக நிலைய உத்தியோகத்தர் திரு  சி.  குகனேசன் மற்றும் கிராமத்தின் பல முக்கியஸ்தர்களும், சங்கம்,கழகங்கள் என்பவற்றின் தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.