மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.

 


மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று  (03) அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

இந்த நிலையில், அவரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.