மட்டக்களப்பு சிறைச்சாலையின் திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னை வயலில் விதைநெல் விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டன.



இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் விதைநெல் விசுறும் நடவடிக்கை சுபவேளையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன

மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த திருப்பெருந்துறையில் உள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பை பண்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நடவடிக்கையின் கீழ் சுமார் 10 ஏக்கர் வயல் நிலத்தில் இன்றைய தினம் விதைநெல் விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் சிறைச்சாலை கைதிகளின் உணவு தேவைப்பாட்டுக்காகவும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நஞ்சற்ற வேளாண்மை உற்பத்தி செயல்பாட்டின் பயிரிடப்படுகின்ற விளைச்சல்களை சிறைச்சாலையில் இருக்கும் சிறைக்கைதிகளின் உணவிற்காக பயன்படுத்துவதாக சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்

சிறைச்சாலையின் அத்தியட்சகர் என் .பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற விதைநெல் விசுறும் நடவடிக்கையில் பிரதான ஜெயிலர் ஆர் மோகன்ராஜ் ,சிறைச்சாலை காவலாளர்கள், ஊழியர்கள் மற்றும் புனர்வாழ்வு கைதிகள் கலந்து கொண்டனர்.