வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொர்பான விசாரணைகளை காத்தான்குடியில் நடைபெற்றது.

 


வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொர்பான விசாரணைகளை மேற்கொள்ளும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஞாயிற்றக்கிழமையும் காத்தான்குடியில் நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கிய ஜனாதபதி ஆணைக்குழு முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த வலிந்து காணமாலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள்  ஞாயிற்றுக்கிழமை சாட்சிமளித்தனர்.

வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும். ஜனாதிபதி ஆணைக் குழு சனிக்கிழமை காலை காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹோட்டல் பீச்வேயில் விசாரணை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதில் சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணமாலாக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட வர்களின் குடும்ப உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தனந்து தமது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இவ் ஆணைக்குழுலின் தலைவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிப்பதற்காக காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு உரியவர்கள் சாட்சியங்களை வழங்கினர்.