அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி அதன் மூலம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச சேவைக்களுக்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியிருந்தார்.