அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தில் பாராட்டு நிகழ்வு.

 

 

 


நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாண மாகாண மட்ட விளையாட்டு விழாவில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலய மாணவன் த.ஜனுஜன் மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தை பெற்ற கிரிக்கெட் அணி மாணவர்களும் அதிபர் ஆசிரியர் உள்ளிட்ட கல்வி சமூகத்தால் இன்று பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பாடாசலையின் அதிபர் திருமதி ஆர். நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழாவானது பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து ஆரம்பமானது. அங்கு பாண்ட் வாத்திய குழுவினரின் வரவேற்பு இசையோடு ஆரம்பமான கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் கே.தங்கவடிவேல் உதவி அதிபர் ந.நேசராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் சகிதம் வெற்றி பெற்ற மாணவர்கள் பாடசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் வீதி ஓரங்களில் காத்திருந்த மாணவர்கள்; வாழ்த்தி வரவேற்றனர்.

இதன் பின்னராக பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிபர் உள்ளிட்டவர்களால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து வெற்றி பெற்ற கிரிக்கெட் அணியினருக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் அதிபர் உள்ளிட்டவர்களால் பொன்னாடை போர்;த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.