சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான சித்துவிலி சித்தம் சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் வருடந்தோறும் நடத்தப்பட்ட சித்துவிலி சித்தம் சித்திரப் போட்டி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள்.ஆசிரியர்கள்.பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கலாக 27 பேருக்கான தங்கம் வெள்ளி.வெண்கலப் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஷா ரியாஸ் ஏற்பாட்டில் .உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்
( காணி) நவரூப ரஞ்சனி முகுந்தன் ,நிருவாக உதவியாளர் றிழா. மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் அ.பிரபாகர் ,மாவட்ட உளவள துறை உத்தியோகத்தர் மதிவண்ணன். உட்பட பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வருடாந்தம் நடாத்தப்படும் சித்திர போட்டி நிகழ்ச்சியின் நோக்கமானது மாணவர்கள் தங்களது நேரங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் உளசமூக நிகழ்ச்சித் திட்டமாகவும் பின் தங்கிய பிரதேச சிறுவர்களையும்,மாணவர்களையும் இதில் பங்கு பெற செய்கின்ற திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பித்தக்கது