யாழ்ப்பாணம் - கொழும்புத் துறை கிளன் தோட்டப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை, உடமையில் விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரது நெருங்கிய சகாவான அதே வயதுடைய இளைஞன் ஒருவரும் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.