22வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும் இல்லாத நிலை காணப்பட்டதால் ஆதரவு வழங்கினோம்

 


22வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும் இல்லாத நிலை காணப்பட்டதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
09மாணங்களுக்குமான தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.