2022/2023 பெரும்போகப் பயிர்ச்செய்கைக் கலந்துரையாடல் .





ருத்ரா

2022/2023  பெரும்போகப் பயிர்ச்செய்கைக் கூட்டம் நேற்று வெல்லாவெளியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), நீர்ப்பாசன பொறியியலாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலில் வெல்லாவெளி,  பழுகாமம், மண்டூர் கமநல நிலையங்களில் இம்முறை விவசாயம் மேற்கொள்ளப்படும் ஏக்கர்களின் அளவும் நெல்லினங்களும் அறிவிக்கப்பட்பதுடன் மண்வளம் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாய பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினரிடமும் அரசாங்க அதிபரிடமும் நேரடியாக முன்வைத்தனர்.