12 மணிநேர நீர் விநியாகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளது.


 

 

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியாகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய 15ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 02, 03, 04 மற்றும் 05 ஆகிய பகுதிகளுக்கும் கொழும்பு 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.