நாளை (10), அனைத்து வங்கிகளும் மூடப்படும் .

 


நாளை  (10), அனைத்து வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பொது மற்றும் வங்கி விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால், இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மிலாது நபி கொண்டாட்டங்களுக்காகவும், வப் பௌர்ணமியை முன்னிட்டும்,  இன்றைய தினம் (09) பொது, வணிக மற்றும் வங்கி விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், 10ஆம் திகதியன்று வங்கி விடுமுறை மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொது அல்லது வணிக விடுமுறை அறிவிக்கப்படவில்லை.