பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி.

 


பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸின் மிகப்பெரிய வரிக்குறைப்பு திட்டங்கள் இந்த வாரம் கடும் பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வரிக்குறைப்பு திட்டங்களால் அந்நாட்டு நாணயமான பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.

அரசாங்கம் தனது நிதி திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளால் பரவலாக பேசப்பட்டாலும் இந்த விடயத்தில் " U " வடிவ திருப்ப பேச்சுக்கே இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலம் அரசாங்கம் அனைத்து அரச நிறுவனங்களையும் சீர்குலைக்க முயல்வதாக பிரித்தானிய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என உலக வங்கியின் தலைவர்  எச்சரித்துள்ளார்.