பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளின் எண்னிக்கை அதிகரித்துள்ளதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக நினைத்து பார்க்க முடியாத குடும்பங்களின் யுவதிகள் கூட பெருமளவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினை தெரிவித்தார்.