வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்து விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து பதிவாகியுள்ளது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றே திடீரென தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென தனது பயணப் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். இதனையடுத்து உடனடியாகவே பாதுகாப்பு நடவடிக்கையாக சாங்கி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சிங்கப்பூர் விமானப் படையின் எஃப்-16 ரக போர் விமானங்களின் பாதுகாப்புடன் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.