தாய்லாந்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள 'ஜென்டில்மேன் எக்ஸ் - ஆடவர் சூப்பர் மொடல் போட்டி - 2026' (Gentlemen X - Male Super Model - 2026) நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்பதற்காக, இலங்கை மொடல் கலைஞர் பாத்திய சமரவீர இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மொடல் கலைஞர்கள் பங்கேற்கவுள்ள இப் போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெறவுள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பாத்திய சமரவீர, இலங்கை கடற்படையில் 15 ஆண்டுகள் லெப்டினன்ட் கொமாண்டராகப் பணியாற்றியுள்ளதுடன், அதில் 10 ஆண்டுகள் கடற்படை ரக்பி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்திய வீரராவார்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டி.ஜி - 308 (TG-308) என்ற விமானம் மூலம் அவர் பாங்கொக் நோக்கிப் புறப்பட்டார்.
அவரை வழியனுப்பி வைப்பதற்காக இப் போட்டியின் இலங்கைப் பணிப்பாளர் மயூர பெரேராவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.




