கிழக்குப்பல்கலையில் உ.சேரனுக்கு அஞ்சலி...










 து. கௌரீஸ்வரன்,
20.11.2026

 

இயற்கையடைந்த ஆய்வறிவாளரும், பத்திரிகையாளரும், புகழ்பெற்ற தமிழ்க் கவிஞருமான உ.சேரன் அவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சி இன்று 20.11.2026 ஆந் திகதி முற்பகல் 10 மணி தொடக்கம் 11:30 வரை இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் கலை கலாசார பீட அவை மண்டபத்தில் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் அவர்களின் முன்னிலையில்  நடைபெற்றது.

முதலில் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதையடுத்து நினைவுரைகள் ஆற்றப்பட்டன. 

இவ்வுரைகளை பேராசிரியர் க.சுரேஸ், பேராசிரியர் சி.சந்திரசேகரம், கலாநிதி த.மேகராசா, திரு த.மலர்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.

சேரனுடைய கவிதையாக்கத்தின் சிறப்புகள், சமூக மானுடவியல் ஆய்வறிவுப் பங்களிப்புகள், பத்திரிகைத்துறைப் பங்களிப்புகள், சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகள் முதலான விடயங்களை மையப்படுத்தி உரைஞர்கள் உரையாடினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியை முதுநிலை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

கலை கலாசார பீடத்தின் பேராசிரியர்களும், துறைத்தலைவர்களும், முதுநிலை விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும், கல்விசாராப் பணியாளர்களும், மாணவர்களும் எனப்பலரும் ஆர்வத்துடன் இதில் பங்குபற்றினார்கள்.

நிறைவாக சேரனின் இழப்பால் துயரடைவோருடன் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடமும் இணைந்து கொள்கின்றது. என்ற நிறைவுரையுடன் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.