எரிவாயுவை மறைத்து வைத்துகொண்டு இல்லை என ஏமாற்றிய வர்த்தகருக்கு நீதிமன்றம் அபராதம் :

 

 


 கண்டியில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைக் கையிருப்பில் வைத்திருந்தும், "எரிவாயு இல்லை" எனப் பொய் கூறி விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்குக் கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி மாவட்ட அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போலச் சென்று சோதனையிட்ட போதே இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் பிரகாரம், பொருட்களை மறைத்து வைத்து நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.