.
மட்டக்களப்பு மாவட்டம், குருமண்வெளி கிராமத்திற்குள் இன்று (22) அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று, குடியிருப்பு வீடுகள் மீது தாக்குதல் நடத்திப் பல வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது.
அதிகாலை வேளையில் கிராமத்திற்குள் நுழைந்த குறித்த காட்டு யானை, வீடுகளைத் தாக்கிச் சேதங்களை ஏற்படுத்தியதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
தமது பிரதேசத்தில் காட்டு யானைகளின் ஊடுருவல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் தமது உயிருக்கும் உடமைகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாகக் கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினர் உடனடி கவனம் செலுத்தி, காட்டு யானைகளின் ஊடுருவலைத் தடுத்துத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




