பேருந்திற்காகக் காத்திருந்த பெண்! காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

 



பொலன்னறுவை - தியபெதும, ஜம்புரவல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 73 வயதான முதிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவருக்கு அரிசி கொண்டு செல்வதற்காக இன்று (01) காலை 5.30 மணியளவில் ஜம்புரவல சந்தியில் பேருந்திற்காகக் காத்திருந்த போதே, அந்த பெண் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர், முதலில் அத்தனகடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பில் தியபெதும காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.