இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

 


தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை.
இலங்கை வானிலைத் திணைக்களத்தின் National Tsunami Early Warning Centre இன்று மாலை 5:41 மணிக்கு No Tsunami Threat Bulletin வெளியிட்டுள்ளது.


இந்தியப் பெருங்கடல் பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (24) மாலை 4.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மொரீஷியஸ் – ரீயூனியன் தீவுப் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் அட்சரேகை 17.78 தெற்கு என்றும், தீர்க்கரேகை 65.82 கிழக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக வெளியிடப்படும் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.