நுவரெலியா - மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவர்கள் 36 பேர் திடீரென சுவாசப் பிரச்சினைக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (20.11.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் காலை உணவை உட்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வகுப்பறைகளில் இருந்த மாணவர்களில் சுமார் 36 பேருக்கு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிகிச்சை பெற்ற 30 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளதுடன், இரண்டு மாணவர்களும் மூன்று மாணவிகளும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.





