அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2027 ஜனவரி மாதம் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் 2027 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தின் அடிப்படை ஊதிய உயர்வுத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு, தனது அறிக்கையை 2027 ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.





