மட்டக்களப்பு, கிரான்குளம் தர்மபுரம் கடற்கரைப் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் எடையுடைய பாரிய கொப்பரா மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.
நேற்று (01) மாலை பிடிக்கப்பட்ட இந்தப் பாரிய மீன் 252,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு கிலோகிராம் கொப்பரா மீன் சுமார் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுவதால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, தற்போது ஒரு கிலோகிராம் கொப்பரா மீன் சுமார் 1,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் சவாலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இவ்வாறான பாரிய மீன் ஒன்று கிடைத்தமை தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





