மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இளைஞர் நட்புறவு சுகாதார சேவை நிலையம் மற்றும் மேற்பார்வையாளர் அலுவலகம் திறந்து வைப்பு!





 














மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இளைஞர் நட்புறவு சுகாதார சேவை நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிலையத்தின் ஊடாக இளைஞர்களுக்குத் தேவையான சுகாதார சேவைகளை நட்புறவான சூழலில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, இளைஞர் நட்புறவு சுகாதார சேவை நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பில் துறைசார் நிபுணர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பிரபுவினால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்பார்வையாளர் அலுவலகமும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.